சிமெண்ட், உரத் தொழிற்சாலை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது
கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிருந்தாலும் இருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை ஏற்கனவே தமிழக அரசு கொடுத்திருந்தது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனைத்து துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ளார்.
அதில் தொழிற்சாலைகளை பொருத்தவரை ஸ்டீல், சிமெண்ட்,உரம் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலை, மருந்து தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கரும்பு, பேப்பர், டயர் தொழிற்சாலைகளும் விதிகளுக்கு உட்பட்டு இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.