தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக கோவையில் 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
சென்னை – 149
கோவை – 64
திண்டுக்கல் – 45
திருநெல்வேலி – 38
திருச்சி – 31
நாமக்கல் – 28
ஈரோடு – 27
ராணிப்பேட்டை – 26
விழுப்புரம் – 20
திருப்பூர் – 20
செங்கல்பட்டு – 20
தூத்துக்குடி – 17
கடலூர் – 13
திருவாரூர் – 12
திருவள்ளூர் – 12
சேலம் – 12
விருதுநகர் – 11
திருப்பத்தூர் – 11
தஞ்சாவூர் – 11
நாகப்பட்டினம் – 11
காஞ்சிபுரம் – 7
வேலூர் – 6
கன்னியாகுமரி – 6
திருவண்ணாமலை – 6
சிவகங்கை – 5
நீலகிரி – 4
ராமநாதபுரம் – 2
கள்ளக்குறிச்சி – 2
பெரம்பலூர் – 1
அரியலூர் – 1