Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 194ஆக அதிகரிப்பு…. 402 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 124ல் இருந்து 194ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 70 பேர் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |