இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தனது வேகத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்கிறது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ல் இருந்து 5,194ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பலி எண்ணிக்கை 120ல் இருந்து 149 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353ல் இருந்து 402 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒருபுறம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்வதால் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்க கூடியதாக இருக்கிறது.