அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர், நோயாளிகள் மீது அதிக கரிசனம் உள்ளவர். அதனால் அனைவராலும் விரும்பப்பட்ட அற்புதமான மனிதர்” என்று கூறப்பட்டுள்ளது.