தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 30 -40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.