Categories
தேசிய செய்திகள்

ஓய்வுபெற்ற ராணுவப்படை மருத்துவர்கள், செவிலியர்கள் தானாக முன்வர வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர்

ஊரடங்கால் வீட்டில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அதை தாம் புரிந்து கொள்வதாகவும், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தாம் வருந்துவதாக கூறிய அவர், ஆனால் கொரோனா வைரசை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் சீனாவின் வுஹான் பகுதியில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய செய்தியையும், கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன என்ற செய்திகளை தொலைக்காட்சி சேனல்கள் மூலம் அறிந்தேன்.

இது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இதன் பொருள் காலப்போக்கில் நிலைமை நமக்கும் சிறப்பாக இருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவ துறையில் அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர்கள், செவிலியர்கள், வார்டு பாய்கள் தானாக முன்வந்து கொரோனா சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபடுமாறு தாக்கரே வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதேபோல மருத்துவ பயிற்சியினை முடித்துவிட்டு சில காரணங்களால் வேலை செய்யாதவர்களும் தானாக முன் வந்து எங்களோடு சேர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நபர்கள் அனைவரும் [email protected] மூலம் அரசை அணுகலாம் எனவும், எந்தவொரு புகாரையும் அனுப்ப இந்த மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |