இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளியே வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடியை மட்டும் ஒதுக்கியது ஏன்? என மத்திய அரசுக்கு உயர்நீமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.