5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா எனும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து சுகுமார் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும் இவர் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்த படத்திற்கு ‘புஷ்பா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார்.