மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை முடிந்ததும் அவரின் உடல்நிலை சரியானது.
இந்நிலையில் மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றார் என தகவல் வெளியானது. இதனை மாம்பலம் காவல் துறையினர் மறுத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாலமுரளி கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என கூறினார்.