Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: 62 மாவட்டங்களில் இருந்து 257 மாவட்டங்களாக உயர்வு.

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரம் பற்றிய தொகுப்பு

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே இருந்தது. 62 மாவட்டங்களில் பாதி திறந்த வைரஸ் 15 நாட்களில் 257 மாவட்டங்களுக்கு அதிவேகமாக பரவி உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளார். அவை

  • மார்ச் 20ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் ஒரு மாவட்டத்தில் தான் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியிருந்தது ஆனால் ஏப்ரல் 4ஆம் தேதி 70 மாவட்டங்களாக உயர்ந்து இருந்தது.
  • இதே நேரத்தில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 195-ல்  இருந்து 2769 ஆக உயர்ந்தது.
  • மார்ச் 20 கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 62 ஆனால் அன்றிலிருந்து ஐந்து நாளில் எண்ணிக்கை இருமடங்காக மாறி 117 ஆகிவிட்டது.
  • கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஜனவரி 17-ஆம் தேதி சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்த விமானங்கள் மூன்று விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டது.
  • மார்ச் 4 முதல் அனைத்து விமானங்களிலும் பயணம் செய்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நாளில்தான் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து 24 ஆக உயர்ந்தது. ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதித்தது.
  • மார்ச் 11 கொரோனா வைரஸ் தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. சமூக இடைவெளியை பராமரிக்க ஆலோசனைகள் மார்ச் 17 வழங்கப்பட்டது. அதே நாளில் கொரோனா வைரஸ் 126 பேருக்கு பரவியது தெரியவந்துள்ளது.
  • மார்ச் 22ஆம் தேதி முதல் வெளிநாட்டு விமானங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டன. அன்றுதான் ஒருநாள் ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் சமூக பரவலுக்கு போவதைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் சிறப்பு வியூகம் அமைக்க வேண்டும். அதை விரைவில் அமல்படுத்த உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |