ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் மருத்துவ பேணடேஜ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 50 சதவீத ஊதிய உயர்வு, பண்டிகை காலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 8000 க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இரண்டாவது நாளாக கூலித் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.