உலக சுகாதார நிறுவனம் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று, கடந்த ஜனவரி 14-ம் தேதி சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கப் போவதாக தெரிவித்தபோது அதனையும் அந்த நிறுவனம் விமர்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா குறித்து நிறைய தகவல்கள் தெரிந்தும் அதனை தெரிவிக்காமல் பெரும் தவறை உலக சுகாதார நிறுவனம் செய்து விட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.