குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்கள் புதுச்சேரியில் நாளை முதல் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் சமூக நலத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் கந்தசாமியின் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்
“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் மேற்கண்ட பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் புதுச்சேரி அரசு விரைந்து எடுத்து வந்தது. இந்நிலையில் நாளை முதல் இலவச அரிசி மற்றும் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது” என குறிப்பிட்டிருந்தது.