கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,518,719 பேர் பாதித்துள்ளனர். 88,502 பேர் உயிரிழந்த நிலையில், 330,589 பேர் குணமடைந்துள்ளனர். 1,051,549 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 48,079 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
கொரோனா வைரசால் தாக்கத்தால் 17,669 உயிரிழப்புகளை இழந்து இத்தாலி முதல் இடத்தில் இருந்த நிலையில் 14,792 பேரை இழந்து ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் இருந்தது. 3ஆம் இடத்தில் அதிக இறப்புகளை சந்தித்திருந்த அமெரிக்கா தற்போது ஸ்பெயின் நாட்டை முந்தி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 14,795 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 7,097 பேரும், ஈரானில் 3,993 பேரும் இறந்து அடுத்ததடுத்த இடத்தில உள்ளன.