Categories
அரசியல்

விழுப்புரத்தில் கொரோனா-2வது முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ்… பலருக்கு நோய் பரவும் அபாயம்!

விழுப்புரத்தில் கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவு வரும் முன்பே அலட்சியத்தால் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 4 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து கடநத 7 ஆம் தேதி தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த நிலையில் 2வது பரிசோதனை முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்த இரண்டாவது ஆய்வு முடிவில் நால்வருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 3 பேர் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.4 ஆவது நபர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. புதுச்சேரிக்கு நேர்காணலுக்கு வந்த டெல்லி இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையின் நிர்வாக அலட்சியத்தால் மேலும் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |