Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையான சில மது பிரியர்கள் விபரீதமான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட புதுக்கோட்டையில் மது கிடைக்காததால் குளிர் பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்த 3 பேர் பலி பலியாகினர். இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால் 52 வயதான செல்வம் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மது கிடைக்காத விரக்தியில் அவர் வேலைபார்க்கும் இளநீர் கடைக்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |