ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கின்றது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து ஊரடங்கை முதல் மாநிலமாக நீட்டித்து ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதித்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் ஒடிசாவில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 30 வரை ரயில் விமான சேவை வேண்டாம் . ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.