Categories
தேசிய செய்திகள்

குஜராத், பீகார் மற்றும் கர்நாடகாவில் எத்தனை பேருக்கு புதிதாக கொரோனா?: அரசு வெளியிட்ட தகவல்!

இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,

குஜராத் மாநிலத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் நகரத்தில் 50 பேரும், சூரத்தில் இருவருக்கும், ஆனந்த், சோட்டா, உதேப்பூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இன்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சிவான் எனும் நகரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக பீகார் முதன்மை சுகாதார செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

அதேபோல, கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |