ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுள்ளதாக பல்வேறு மாநில அரசும் தெரிவித்தன. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்தது. தேர்வு எழுதாமல் மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்கு உயர்ந்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கல்லூரி மாணவர்களுக்கும் பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் சென்னை பல்கலை. முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணாபல்கலை கீழ் இயங்கும் 540க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பொறியியல் படிப்பு முடியாதவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பலக்லைக்கழகம் அறிவித்திருந்தது. அதாவது, படிப்பு முடிக்காத மாணவர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வு எழுதலாம் என அறிவித்தது. தற்போது அவர்களுக்கும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை. அறிவித்துள்ளது.