தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி மருமகள் வயிற்றில் மாமியார் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.