வங்கி EMI செலுத்துவதை தள்ளி போடுவதற்கான OTP கேஸ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் 19 வைரஸ் தொற்று பரவல் தொடர்பான பல்வேறு செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றது. இதை கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப் போடுவதற்கு OTPயை செலுத்துங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்த தனிபிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப் போடுவதற்கு OTP தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.