தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளர்.
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்ற 27 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்துகிறோம். டெல்லி சென்று வந்த 1480 பேரில் 763 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 59,918 பேர் உள்ளனர். கொரோனா சிகிச்சை வார்டுகளில் 211 பேரும், 28 நாட்கள் நிறைவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 32,796 பேர், கொரோனா பரிசோதனை செய்தது 7,267 பேர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.