கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில், பிரதமர் நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி ஊழியர்களுக்கு 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 25 லட்சம், தினக் கூலிகள் மற்றும் தான்பிறந்த ராயபுரம் பகுதி ஏழை மக்களுக்காக ரூபாய் 75 லட்சம் லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.
பி .வாசு இயக்கத்தில் ரஜினி நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையில் லாரன்ஸ் உதவி செய்துள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 9, 2020