Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிரிவில் பணியாற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் இருமடங்கு ஊதியம்: ஹரியானா முதல்வர்

கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.

நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், நான்காம் வகுப்பு தொழிலாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆய்வக சோதனை ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்கள் ஆகியோரின் சம்பளம் கொரோனா தொற்று இருக்கும் வரை இரட்டிப்பாக வழங்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநிலத்தில் உள்ள 2588 பஞ்சாயத்துகளுக்கு ரூ .5 கோடி தொகையை முதல்வர் இன்று வெளியிட்டார்.

Categories

Tech |