பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருந்தாலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களை விட பீகாரில் குறைந்த அளவே உள்ளது.
இதற்கிடையே அங்கு புதியதாக 12 பேர் இந்த தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து பீகார் மாநில சுகாதாரத் துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியதாவது; “முதலில் 4 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அதன்பிறகு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வயது 12 முதல் 29 வரை உள்ளவர்கள் ஆவர். பின்னர் அதேபோல 3 பெண்கள் உட்பட 5 பேரின் ரத்த மாதிரிகளும் கொரோனா நோய் கண்டறியும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்களுக்கும் இந்த வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் ஓமன் நாட்டிற்கு சென்று வந்த நபருடன் பழக்கம் வைத்திருந்தது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.