கொரோனா வைரஸ் வெயிலில் துடித்து சாகுமா என்ற ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நம் ஊர்களில் பலபேர் கூறுகிறார்கள், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்று இதில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. எங்கு வெயில் அதிகமாக இருக்கிறதோ அங்கு கொரோனா பரவும் வீரியம் குறையும் எனவும் குளிர் பிரதேசங்களில் தான் அதிகமாக இருக்கும் எனவும் இதுபோன்று ஒரு சந்தேகம் தோன்றியது.
அதாவது வெயிலில் கொரோனா துடிதுடித்து சாகும் என்கிற சந்தேகத்தோடு கோரோனோ வைரஸை எடுத்துக் கொண்டு ஆய்வுக்கூடத்திற்கு சென்றார்கள். கொரோனா வெயிலில் உயிரோடு இருக்குமா அல்லது துடிதுடித்துச் சாகிறதா என்று ஆய்வுக்கூடத்தில் நுழைந்தார்கள் விஞ்ஞானிகள். வெயிலின் சூட்டை போன்ற தட்ப வெப்ப நிலையை உருவாக்கியவர்கள், காற்றில் ஈரப்பதத்தையும் வைத்தார்கள்.
சரியான சூழலை ஏற்படுத்தி அதனுள் வைரஸை வைத்து சுமார் 16 மணிநேரம் வரை உற்று நோக்கினார்கள். இந்த தட்பவெப்ப சூழலில் கொரோனா வைரஸை உற்று கவனித்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காய்ச்சல், டிபி, சார்ஸ் போன்ற நோயை உருவாக்கும் நுண் கிருமியை காட்டிலும், புதிய கொரோனா வைரஸ்க்கு ஆயுள் அதிகம் என தெரியவந்துள்ளது.
அதாவது மனித சமுதாயம் அழிந்து கிருமியை விட புதிய கொரோனா வைரஸ் இந்த தட்பவெப்ப சூழலில் அதிக நேரம் உயிர் வாழ்வது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயிலால் புதிய கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்று சொல்ல எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா குடும்பத்தில் இது புதிய வைரஸ்.
இது குளிர் பிரதேசங்களை காட்டிலும் பரவும் வீரியம் அதிகரிக்குமா அல்லது வெயில் அடிக்கும் இடத்தில் குறைவா என்பது ஆய்வில் உள்ளது. இது மனித சமுதாயத்திற்கு ஏற்கனவே அறிமுகமான வைரஸ் அல்ல இது ஒரு புதிய வைரஸ் அதுமட்டுமல்ல விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்துள்ளது. புரிந்துகொள்ள சிரமமாய் உள்ளது என உலக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெயிலை மட்டும் நம்புவதைவிட கையை சுத்தமாக வைத்திருப்பதும், தனிமனித இடைவெளியை காப்பதுமே சிறந்த வழி என்று அவர்கள் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.