Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,06,539 வாகனங்கள் பறிமுதல்… 1,35,734 பேர் கைது!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால்  அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும்  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறுவதால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த சூழலில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை கூறியதாவது, தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக 45 லட்சத்து 13 ஆயிரத்து 544 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |