பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அத்துமீறி சமூகமாக மாறி வருகிறது இதனால் அந்த பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது
பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது மேலும் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர் இந்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான விவரங்களையும் அல்லது எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை நேரடியாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மேலும் பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்களுடன் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து சிபிசிஐடி இடம் கூறும் பொழுது அந்த தகவல்கள் ஆனது ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வழக்கு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை சிபிசிஐடி என் தனிப்பட்ட வாட்ஸப் நம்பர் இருக்கும் அல்லது சிபிசிஐடி என் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் அனுப்புமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது இவ்வாறு செய்வது பாதிக்கப்பட்ட பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறது ஆகவே இவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது