மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மகாராஷ்டிராவின் தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஏற்கனவே ராஜீவ் ராஜீவ் விளையாட்டு வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது பிரஹன் மும்பை மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் தாராவியில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. தாராவி நெருக்கமான மக்கள் தொகை நிறைந்த பகுதி என்பதால் அங்கு மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனஅஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,380ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.