Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் 834 பேர் ஆகும். மேலும், இன்று பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில்,

1) ராஜஸ்தானில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஜெய்ப்பூரில் 15 பேரும், பன்ஸ்வாராவில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் கொரோனாவால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520 ஆகக் உயர்ந்துள்ளது.

2) மத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நகரில் மட்டும் இன்று 14 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போபாலில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 441 ஆக உயர்ந்துள்ளது.

3) கர்நாடக மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. அதில், 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்ட 10 பேரில் 9 பேர் கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

4) கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மாநிலத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சிவான் மாவட்டத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |