இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் தமிழகத்தில் தேர்தல் தேதி வருவதால் கிறிஸ்துவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிரமமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் சென்னை பாதிரியார் ஒருவர் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தலானது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது இந்த தேர்தல் மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்திலும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்கள் நடைபெறுகின்றன இந்த தேர்தல் ஒரு சில மாவட்டங்களில் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன அதில் ஒரு மாவட்டமான மதுரை மாவட்டம் சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது இந்த வழக்கானது தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது
இதனைத் தொடர்ந்து சென்னை பாதிரியார் ஒருவர் கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் விரதமிருந்து கொண்டாடக்கூடிய பரிசுத்த வாரம் என்று சொல்லக்கூடிய அந்த நாள்களில் தேர்தல் தேதி ஆனது வருகிறது இதனால் கிறிஸ்தவ மக்கள் வாக்களிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் மேலும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளாக அது கருதப்படுவதால் அந்த நாள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது இதனால் அந்நாளில் நடைபெறக்கூடிய சிறப்பு வழிபாடு ஆனது பாதிக்கப்படும் என்றும் மேலும் கிறிஸ்தவர்கள் வாக்களிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி அவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்து உள்ளார் இது தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகிறது