Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில் இளம்பெண் பலாத்காரம்…இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!!

சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இதை அடுத்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சென்னை அமைந்தகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடிக்க சென்ற வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த திருடனை போலீஸார் கைது செய்தனர். சென்னை திருமங்கலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். பகல் நேரத்தில் வீடு வீடாக பால் பாக்கெட் போட்டு வந்த ராமகிருஷ்ணன் இரவில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு அண்ணாநகர் பகுதியில் திருடச்சென்ற ராமகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |