ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதுவரை 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஸ்பெயினில் 15,843 பேர், இத்தாலியில் 18,279 பேர், பிரான்ஸ் நாட்டில் 12,210 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் முன்பை விட தற்போது உயிரிழப்புகள் விகிதம் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதிதாக கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157,022 ஆகும். மேலும் 55,668 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.