Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பரவலாக மழை.. மீண்டும் வாய்ப்புள்ளதா.? வானிலை ஆய்வாளர் விளக்கம்..!!

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகிறார்.

பொதுவாக ஏப்ரல் மாதங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வது வழக்கம். ஆனால் நேற்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றை இரண்டு மைய மாவட்டங்கள் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் இருந்து வட கடலோரம் தொடங்கி டெல்டா மாவட்டம் தென்மாவட்டத்தில் கடலோரம் தவிர, அனைத்து உள்மாவட்டங்களிலும் அதிகபட்ச காற்று குவிப்பின் காரணமாக, அதாவது  காற்று லேசாகி மேல் எழும் பொழுது கிழக்கு மற்றும் மேற்கு காற்றுகள், லேசான காற்றை உள் மாவட்டங்களிலேயே குவித்த காரணத்தினாலே  கன மிகக்கன மழை பல மாவட்டங்களில் நேற்று பதிவாகி உள்ளது.

இந்த மழை இன்று அந்த இடத்தில் வாய்ப்பில்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய வானிலைக் காற்றின் போக்கை பார்க்கும்பொழுது சேலம் மாவட்டத்தின் தெற்கே, கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியி, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, விருதுநகர் மாவட்டம் மேற்கு பகுதி, தேனி மாவட்டம், மதுரை மாவட்டம் பரவலாக, திண்டுக்கல் மாவட்டம் பரவலாக, திருச்சி மாவட்டம் மேற்கு பகுதி, திருப்பூர் மாவட்டம் பரவலாக, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டம்,  நாமக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதி, மட்டும் மீண்டும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளையிலிருந்து இந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும். இன்று பெய்யும் மழையின் அளவை விட நாளை குறைந்து விடும். மீண்டும் மழையானது ஏப்ரல் 16ம் தேதி பின்தான் தொடங்கும். அப்பொழுது பெரிய அளவில் தீவிரம் இருக்காது. ஏப்ரல்  20ஆம் தேதிக்கு மேல் மாலை இறுதி வாரத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Categories

Tech |