நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம்.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரம் தேதி மற்றும் நேரத்தை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். முதற்கட்டமாக ராயம்புரம் கிராமத்தில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. அறுவடைக்கு ஆள் கிடைக்காத நிலையில் வாடகை இன்றி இலவசமாக அறுவடை செய்து கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசின் நடவடிக்க்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.