உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் 834 பேர் ஆகும். அதேபோல, புதிதாக வைரஸ் பாதிப்பு இருப்பவர்களை எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று மகாரஷ்டிராவில் 16 பேர் , குஜராத்தில் 67 பேர், ராஜஸ்தானில் 26 பேர், மத்திய பிரதேசத்தில் 14, பீகாரில் 17, கர்நாடகாவில் 10 பேருக்கு இதுவரை புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல, உத்தரபிரதேச மாநிலத்திலும் இன்று புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்துள்ளது. அதில் 32 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் 8671 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல 459 பேர் ஐசோலேஷன் வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.