Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : பஞ்சாப்பில் ஊரடங்கு மே வரை நீட்டிப்பு …!!

பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவிலேயே ஒடிசாவுக்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில்தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர தெலுங்கானா, கேரளா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களிலும் இந்தப் பட்டியலில் இருக்கக் கூடிய சூழ்நிலையில் நாளை தினம் தமிழகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு உத்தரவு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்திய பிறகு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசின் சார்பிலும் நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |