தமிழகத்தில் 5 பேரிடம் இருந்து 72 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததால் மேலும் கொரோனா பரவ வாய்ப்பில்லை.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேரும் நேரடியாக பயணம் செய்ததுள்ளவர்களாக இருக்கிறார்கள், கொரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.கொரோனா பாதித்தவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கு கொரோனா தொற்று ஏதுமில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்த மருத்துவ குழுவின் பரிந்துரையை முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.