Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் கோழி இறைச்சி பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுடைய கோழி இறைச்சியை கொரோனா கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 17வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இறைச்சி கடைகள் திடக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற எந்த ஒரு இறைச்சி கடைகளும் செயல்படுவதில்லை.

இந்த நிலையில், பிள்ளையார் பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய கிருஷ்ணன் தெருவில் மெகபூ பாஷா என்பவர் வீட்டில் ஏறத்தாழ 3 டன் அளவில் இறைச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு காஞ்சிபுரம் வட்டாச்சியர் தலைமையில் ஒரு சிறப்பு குழு சென்றது.

அப்போது, உரிமையாளர் வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் சுமார் 3 டன் அளவில் பழைய கோழி இறைச்சி பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை முழுவதும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த இறைச்சிகளை அழிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Categories

Tech |