நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் மற்றும் அவரது கிளினிக் உட்பட அனைத்துப் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அவரிடம் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்ற 54 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தனிமை படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த மருத்துவர் அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது.