Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொடூர கொரோனா ”ஒரு லட்சத்தை கடந்தது உயிரிழப்பு” அரண்டு போன உலகம் …!!

கொரோனாவால் உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

France's coronavirus death toll rises by 186 in a day, lockdown ...

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,639,763 பேர் பாதித்துள்ளனர். 100,156 பேர் உயிரிழந்த நிலையில், 369,017 பேர் குணமடைந்துள்ளனர். 1,170,590 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 49,302 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

China's coronavirus death toll surges, fuels speculation cases ...

 

கொரோனா வைரசால் தாக்கத்தால் 18,849 உயிரிழப்புகளை இழந்து இத்தாலி முதல் இடத்தில் உள்ள நிலையில் 17,909 பேரை இழந்த அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. 3ஆம் இடத்தில் 15,970 இறப்புகளை சந்தித்து ஸ்பெயின் உள்ள நிலையில் 12,210 பேரை இழந்து பிரான்ஸ் அடுத்த இடத்திலும், 8,931 பேரை இழந்து பிரிட்டன் அடுத்த இடத்திலும் உள்ளது.

Categories

Tech |