Categories
பல்சுவை

மறக்க முடியுமா….? ஜாலியன் வாலாபாக் படுகொலை…!!

வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை

1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த நிலையில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அன்று ஜெனரல் டயர் என்ற வெள்ளைய அதிகாரி எந்த பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என்றும் மக்கள் எங்கும் கூட கூடாது எனவும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

எல்லாப் பக்கங்களும் பெரிய மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த நிலையில் தனது படையினருடன் ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டயர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்து கதவுகளையும் மூடி அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார். தோட்டாக்கள் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும் பெண்களும் பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1700 பேர் உயிரிழந்தனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் வெள்ளையர்கள் மீது இந்திய மக்களுக்கு வெறுப்புணர்வை அதிகரித்து சுதந்திர போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ள காரணமாக இருந்தது.

Categories

Tech |