சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84) ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு 3 பேரும் குணமடைந்துள்ளனர். ஒருமுறை கொரோனா தொற்று வந்துள்ளது. பின்னர் அவர்களை கண்காணித்து கொண்டே இருந்து பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு முறை தொடர்ச்சியாக சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த தகவலை கே.எம்.சி.எம் மருத்துவமனையின் வசந்தாமணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.