ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார்
கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் சங்கத்திற்கு 3.5 லட்சம் நிதியாக வழங்கியுள்ளார். அதோடு நூறு மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.
இதேபோன்று நடிகை குட்டி பத்மினி மற்றும் நடிகர் பசுபதி ஆகியோரும் தலா ரூபாய் 15,000 நிதியாக கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர் நடிகைகளின் வங்கி கணக்கில் தலா 500 ரூபாய் போடப்பட்டு இருப்பதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.