Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் அருமையான காளான் குழம்பு..!!

கறிக்குழம்பை விட டேஸ்டான ஒரு சூப்பரான குழம்புசெய்வதை பற்றி பார்ப்போம்.

அரைத்து கொள்ள தேவையானவை:

எண்ணெய்                      –  2 டீஸ்பூன்
மிளகு                                  –  ஒரு டீஸ்பூன்
சீரகம்                                 – ஒரு டீஸ்பூன்
சோம்பு                              – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்    –  20
பெரிய வெங்காயம்   –  1
உப்பு                                   –  ஒரு டீஸ்பூன்
தக்காளி                           –  1

குழம்பு வைக்க தேவையானவை:

எண்ணெய்                              –  3 டீஸ்பூன்
பட்டை                                        – 2 கிராம்பு
ஏலக்காய்                                  – 2
அன்னாசி பூ                             – ஒன்று
பெரிய வெங்காயம்             –  2
உப்பு                                             – ஒரு டீஸ்பூன்
தக்காளி                                     –  ஒன்று
கறிவேப்பிலை                       –  சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது           –  1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி                        – கால் டீஸ்பூன்
வத்தல் பொடி                         –  ஒரு டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள்      – 2 டீஸ்பூன்
காளான்                                      – 300 கிராம்
உருளைக்கிழங்கு                  –  2 உப்பு
உப்பு                                             –  தேவையான அளவு
கொத்தமல்லி தழை             – சிறிதளவு
அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிளகு, சோம்பு, சீரகம் இவை அனைத்தையும் போட்டு பொரியவிடவும். உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய தக்காளியும் இதோடு சேர்த்து ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2 ஏலக்காய், கிராம்பு, சோம்பு, அன்னாசிப்பழம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய ஒரு தக்காளியும் இதோடு சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் இதோடு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி  பச்சை வாசனை நீங்கும் அளவிற்கு வதக்கவேண்டும்.

நன்றாக சுருண்டு வதங்கிய பின்பு மஞ்சள் பொடி, வத்தல் பொடி, அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட் இவை அனைத்தையும் இதோடு சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். இதோடு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அனைத்தையும் வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் காளான் 300 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக கட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் இதோடு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

இரண்டு உருளைக்கிழங்கு தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இதோடு சேர்த்து கிளறி விட வேண்டும். தண்ணீர் ஏதும் ஊற்றாமல் மிதமான சூட்டில் பத்து நிமிடம் வரை மூடி வைத்துக் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் கழித்த பிறகு நன்றாக காளானில் உள்ள நீர் இறங்கி கொதித்து வரும். அப்பொழுது ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து குக்கர் ஒரு விசில் விடும் வரை கொதிக்க விடுங்கள். இப்பொழுது  கறிக் குழம்பின் சுவை மிஞ்சும் அளவிற்கு காளான் குழம்பு ரெடி..!

Categories

Tech |