Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை – பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை ஏப்.,14ம் தேதிக்கு பின்னர் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினாா்.

இந்த நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் இதில் தமிழக பழனிசாமியும் பங்கேற்றனர். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீடிக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய அலோசனை நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தில் பெரும்பான்மையான மக்கள் தமது அழைப்பை உணர்ந்து ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்றும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியே கொரோனாவில் இருந்து மக்கள் உயிரை காப்பாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் ஆலோசிக்க உள்ளார். இன்றோ, நாளையோ முடிவை பிரதமர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |