Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் இருமிய பயணி… கொரோனா தாக்கி பலியான ஓட்டுநர்…. குடும்பத்திற்கு அனுப்பிய last message…!!

கார் ஓட்டுனர் கொரோனாவால் இறந்த நிலையில் காரில் வந்த பெண் தொடர்ந்து இருமி வந்து உள்ளார் என சகோதரனிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார் 

லண்டனில் உபர் கார் ஓட்டுநராக இருந்தவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒட்டிய காரில் பயணம் செய்த பெண் ஒருவர்  தொடர்ந்து இருமியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தெற்கு லண்டனை சேர்ந்த அயுக் அக்பர் உபர் கார் ஓட்டுனராக இருந்துள்ளார் . இந்நிலையில் அக்பர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து  அக்பர் மரணம் மற்றும் அவர் பட்ட துன்பம் குறித்தும் அவரது சகோதரர் யாசிர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

யாசிர் பேசுகையில், “அக்பர் கார் ஒட்டி சென்ற பொழுது காரில் பயணித்த பெண் தொடர்ந்து இருமி கொண்டு இருந்ததாக அவர் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். இதன் பின்னர் சில தினங்களுக்குப் பிறகு  அக்பருக்கு கடுமையான ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். தீவிர சிகிச்சை பிரிவில் அக்பர் அனுமதிக்கபட்டதால் எங்களை பார்க்க விடவில்லை.

அச்சமயம் எங்களுக்கு இறுதியாக மெசேஜ் ஒன்று அனுப்பினார், அதில் எனக்கு பயமாக உள்ளது, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அனுப்பியிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்” என கூறியுள்ளார். அதோடு அக்பர் இறுதிச்சடங்கு எப்போது நடக்கும் என்பதும் தெரியவில்லை என கூறி குடும்பத்தார் கவலை அடைந்துள்ளனர்.

 

Categories

Tech |