இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7529 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447ல் இருந்து 7,529 ஆக அதிகரித்துள்ளது. இதில் 242 பேர் உயிரிழந்த நிலையில், 653 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில் 1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.