தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் 9ஆக இருந்த உயிரிழப்பு 10ஆக உயர்ந்துள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.